விளாத்திகுளம் அருகே பட்டா அடங்கல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் ரூ100 லஞ்சம் கேட்டது தொடர்பான புகார் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்

விளாத்திகுளம் அருகே பட்டா அடங்கல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் ரூ100 லஞ்சம் கேட்டது தொடர்பான புகார் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்
x
தினத்தந்தி 16 Nov 2021 7:29 PM IST (Updated: 16 Nov 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே பட்டா அடங்கல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் ரூ100 லஞ்சம் கேட்டது தொடர்பான புகார் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே பயிர் காப்பீடு பட்டா அடங்கல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் ரூ.100 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் சில கிராம நிர்வாக அலுவலர்கள், விளாத்திகுளம் லாட்ஜில் வைத்து பட்டா அடங்கல் சான்று வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந் நிலையில் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், விளாத்திகுளம் தாசில்தார் விமலா ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணை ஒருதலைபட்சமாக நடைபெற்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக உதவி கலெக்டர் சங்கரநாராயணன் கூறுகையில், “சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பற்றி கிராம மக்களிடம் விசாரித்தேன். மேலும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரை அழைத்து விசாரணை நடத்தி அதன் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்

Next Story