திருச்செந்தூரில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் இருந்து கோவிலுக்கு செல்ல பேட்டரி கார் வசதி செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்


திருச்செந்தூரில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் இருந்து கோவிலுக்கு செல்ல பேட்டரி கார் வசதி செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்
x
தினத்தந்தி 16 Nov 2021 7:38 PM IST (Updated: 16 Nov 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் இருந்து கோவிலுக்கு செல்ல பேட்டரி கார் வசதி செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் இருந்து கோவிலுக்கு செல்ல பேட்டரி கார் வசதி செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நாழிகிணறு, பஸ்நிலைய பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை புதுப்பிக்கும் பணியையும், வாகன நிறுத்துமிடத்தை விரிவுப்படுத்தும் பணியையும், அப்பகுதியில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்றி புதுப்பிக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் கூறியதாவது:-
சுகாதார வளாகம் புதுப்பிப்பு
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உத்தரவுபடியும், அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படியும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் பக்தர்கள் பயன்படுத்திய ஆண், பெண் சுகாதார வளாகங்கள், குளியலறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு 10 பேர் ஒரே நேரத்தில் குளிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சுகாதார வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கை பயன்படுத்தாமல், நேரடியாக நகர பஞ்சாயத்து பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் வெளியே செல்வது தடுக்கப்படும். இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும்.
பேட்டரி கார் வசதி
மேலும் இக்கோவிலுக்கு விழாக்காலங்களில் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவில் வளாகத்தில் தெற்கு பகுதியில் காலியிடத்தில் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தப்படும். மேலும் கடற்கரை பகுதியாக இருப்பதால் மின்கம்பங்கள் துருப்பிடித்துள்ளது. இந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் நிறுவப்படும். மேலும் மூன்று உயரழுத்த மின்கோபுர விளக்குகள் அமைக்கப்படும். கடற்கரை பகுதியில் இருந்து முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் கோவிலுக்கு செல்வதற்கு பேட்டரி கார் வசதி செய்யப்படும். இப்பணிகள் முழுமையாக முடித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதிக்குள் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் சரவணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் சுவாமிநாதன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் கவுதமன், உதவி பொறியாளர் ஹாரிஸ், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) முத்துகிருஷ்ணாராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story