சிறுமியை கடத்தி திருமணம்


சிறுமியை கடத்தி திருமணம்
x
தினத்தந்தி 16 Nov 2021 7:40 PM IST (Updated: 16 Nov 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி

ஊட்டியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கடத்தி சென்று திருமணம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அன்பு அண்ணா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 20). இவருக்கும், ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதற்கிடையே பன்னீர்செல்வம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவளை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

போலீசில் புகார்

இந்த நிலையில் வீட்டில் இருந்த சிறுமி காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் அவள் கிடைக்கவில்லை. அதன்பின்னர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சிறுமியை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அவளை மேட்டுப்பாளையத்துக்கு பன்னீர்செல்வம் கடத்தி சென்று திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் அவர்களை ஊட்டிக்கு அழைத்து வந்தனர். 

போக்சோவில் கைது

இதையடுத்து 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்ததால் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story