மேரக்காய் விளைச்சல் அதிகரிப்பு
கோத்தகிரியில் தொடர் மழையால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரியில் தொடர் மழையால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது.
மேரக்காய் சாகுபடி
கோத்தகிரி பகுதியில் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கொய்மலர், காளான், ஸ்ட்ராபெர்ரி, மேரக்காய் போன்ற மாற்று பயிர் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, எரிசிபெட்டா, இந்திராநகர், வ.உ.சி நகர் உள்ளிட்ட கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக போதுமான மழை பெய்யாததால் வறட்சியின் காரணமாக மேரக்காய் பயிரிட்ட தோட்டங்களில் உள்ள கொடிகள் வாடிப்போனது. மேலும் விளைச்சலும் பாதிக்கப்பட்டு இருந்தது.
விளைச்சல் அதிகரிப்பு
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேரக்காய் தோட்டங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்ப தொடங்கி உள்ளன. இதுமட்டுமின்றி மேரக்காய் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் மேரக்காய் கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மழை காலம் முடிந்தவுடன் மேரக்காய் கொள்முதல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story