சிம்ஸ் பூங்காவுக்குள் புகுந்த கரடியால் ஊழியர்கள் பீதி


சிம்ஸ் பூங்காவுக்குள் புகுந்த கரடியால் ஊழியர்கள் பீதி
x
தினத்தந்தி 16 Nov 2021 7:40 PM IST (Updated: 16 Nov 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

சிம்ஸ் பூங்காவுக்குள் புகுந்த கரடியால் ஊழியர்கள் பீதி

ஊட்டி

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இவை அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சம்பவத்தன்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்தது. பூங்கா வளாகத்தில் நடமாடிய கரடி தோட்டக்கலைத்துறை தங்கும் விடுதியின் கதவை உடைத்து உள்ளே சென்றது. அங்கு சமையல் அறையில் வைக்கப்பட்டு இருந்த சர்க்கரையை தின்றது. மேலும் பொருட்களையும் ஆங்காங்கே சிதறடித்தது. 

மேலும் சர்க்கரை இருந்த டப்பாவை தூக்கி சென்றது. பூங்காவில் கரடி புகுந்ததால் ஊழியர்கள், சுற்றுப்புற மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


Next Story