தூத்துக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


தூத்துக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
x
தினத்தந்தி 16 Nov 2021 8:56 PM IST (Updated: 16 Nov 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலம் மோசடி
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் சேவியர் நேரிஸ். இவர் தற்போது இலங்கை, கொழும்பில் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து 1992-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குமாரகிரி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கி தங்களுக்குள் பிரித்து அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜோசப் சேவியர் நேரிஸ் தனக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார்.
2 பேர் கைது 
அதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டு சம்பத், இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜோசப் சேவியர் நேரிஸின் நிலம் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த தக்கா பிச்சை மகன் ரகுமத்துல்லா மற்றும் வள்ளித்துரை ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிலரையும் தேடி வருகின்றனர்.

Next Story