ஊத்துக்குளியில் கொட்டி தீர்த்த மழை


ஊத்துக்குளியில் கொட்டி தீர்த்த மழை
x
தினத்தந்தி 16 Nov 2021 9:50 PM IST (Updated: 16 Nov 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளியில் கொட்டி தீர்த்த மழை

ஊத்துக்குளி, 
ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் செங்கப்பள்ளி, காடபாளையம், பொன்னாபுரம், கொடியம்பாளையம் நால்ரோடு, ஊத்துக்குளி ரயில் நிலையம், திம்மநாயக்கன் பாளையம், பெட்டிக்கடை பகுதிகளில் கன மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் இப்பகுதியை கடக்க ரெயில்வே பாலத்தின் மீது ஏறி அபாயகரமாக ரெயில் ரோட்டை கடந்து பாலத்தின் மறுபுறம் சென்றனர். மேலும் ரெயில்வே நுழைவு பாலத்திற்கு அடியில் மழைநீரில் கழிவு நீரும் கலந்து செல்வதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர்.

Next Story