தீபம் ஏற்ற தயாராகும் அகல் விளக்குகள்
திருக்கார்த்திகை திருநாளையொட்டி திண்டுக்கல் அருகே அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
திண்டுக்கல்:
திருக்கார்த்திகை திருநாளையொட்டி திண்டுக்கல் அருகே அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
திருக்கார்த்திகை திருநாள்
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை திருநாள், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவதோடு கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதிலும் ஒருசில கோவில்களில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் வரிசையாக வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
அதேபோல் வீடுகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தீபம் ஏற்றி மக்கள் வழிபாடு நடத்துவார்கள். இதற்காக திருக்கார்த்திகை திருநாளுக்கு முந்தைய தினமே அகல் விளக்குகளை மக்கள் வாங்கி விடுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பீங்கான் விளக்குகள், பேன்சி விளக்குகள் என புதிய வகை அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. எனினும் களிமண்ணில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது.
அகல் விளக்குகள்
அந்த வகையில் திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு களிமண்ணால் விதவிதமாக பல்வேறு வகையான அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. அதன்படி சாதாரண அகல் விளக்கு, உருளி விளக்கு, மேஜிக் விளக்கு, விநாயகர் விளக்கு, லட்சுமி விளக்கு, தாமரை விளக்கு, குபேரன் விளக்கு, அடுக்கு விளக்கு உள்பட பல வகையான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த அகல் விளக்குகள் ரூ.1 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
Related Tags :
Next Story