விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24202 பேர் விண்ணப்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24202 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 16 Nov 2021 10:02 PM IST (Updated: 16 Nov 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24202 பேர் விண்ணப்பம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக 1,048 வாக்குச்சாவடி அமைவிடங்களில் (1,962 வாக்குச்சாவடிகள்) கடந்த 13, 14-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அமைவிட நியமன அலுவலர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தொடர்பாக பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றனர். 2 நாட்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் 28,923 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 24,202 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பெயர் நீக்கம் செய்ய 1,025 பேரும், திருத்தம் செய்ய 2,231 பேரும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,465 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

Next Story