திண்டுக்கல் பஸ்நிலைய கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம்
திண்டுக்கல் பஸ் நிலைய கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம்விடப்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலமிடப்பட்டது. அப்போது கடைகள் ஏலம் முறையாக நடைபெறவில்லை என்று கூறி மாநகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 36 கடைகளுக்கான ஏலம் நேற்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதையொட்டி கடைகளை ஏலம் எடுப்பதற்கு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் பலர் குவிந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அலுவலக நுழைவுவாயில் முதல் வளாகம் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடைகளை ஏலம் எடுப்பவர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே ஒரு தரப்பினர் கடைகள் ஏலம் முறையாக நடைபெறவில்லை என்று கூறி குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீசார் தலையிட்டு அவர்களை சமரசம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story