பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது


பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2021 10:18 PM IST (Updated: 16 Nov 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் நகர துணை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, வீரபாண்டியன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் குச்சம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 22), பெரியகோட்டையை சேர்ந்த கண்ணன் (23) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு, சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகளில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று, தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகைகளை பறித்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் 9 பவுன் நகைகள் மற்றும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story