தனியார் பஸ் மோதி டிரைவர் பலி
பரமக்குடி அருகே தனியார் பஸ் மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் நிற்காமல் சென்றதால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே தனியார் பஸ் மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் நிற்காமல் சென்றதால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
லாரி டிரைவர்
பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது37). லாரி டிரைவர். நேற்று இரவு அவர் அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தார்.
மோதிய பஸ் நிற்காமல் சென்றுவிட்டது. இதை அறிந்த கிராம மக்கள் மோதிய பஸ்சை பிடிக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்தை நடத்தினர். உடனே நடவடிக்கை எடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சை இளையான்குடியில் போலீசார் மடக்கி பிடித்தனர். ஆனால் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலியான டிரைவர் வேல்முருகனுக்கு கார்த்திகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story