அரசு பஸ் மோதி, தலைமை ஆசிரியர் பலி


அரசு பஸ் மோதி, தலைமை ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 16 Nov 2021 10:39 PM IST (Updated: 16 Nov 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் அரசு பஸ் மோதி, தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பரமக்குடி, 
பரமக்குடியில் அரசு பஸ் மோதி, தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தலைமை ஆசிரியர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து சீராளன் (50). இவர் சின்ன நகராட்சியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது மோட்டார் சைக்கிளில் சித்தப்பாவை ஏற்றிக்கொண்டு காந்தி நகரில் இருந்து பரமக்குடி நோக்கி சென்றுள்ளார்.  வைகை நகர் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ், முத்து சீராளன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது அரசு பஸ்சின் சக்கரத்தில் முத்து சிராளன் சிக்கினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, முத்து சீராளன் இறந்துவிட்டது தெரியவந்தது. அவருடைய சித்தப்பாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது 
இதுகுறித்து எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான சென்னையைச் சேர்ந்த கணேசன் (54) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story