இடியுடன் கன மழை


இடியுடன் கன மழை
x
தினத்தந்தி 16 Nov 2021 11:03 PM IST (Updated: 16 Nov 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர், வெண்ணீர் வாய்க்கால், வெங்கலகுறிச்சி, மேலமானாங்கரை, ஏனாதி, இளஞ்செம்பூர், சாக்குளம், கீரனூர், நல்லூர், தூரி, கருமல், காக்கூர், தேரிருவேலி, சித்தி ரங்குடி, பேரையூர், இலந்தைகுளம், காஞ்சரங்குளம் ஆகிய கிராமங்களில் கன மழை பெய்தது. கடந்த 3 நாட் களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்குமேல் ஒரு மணி நேரம் இடி மின்ன லுடன் கனமழை கொட்டியது. முதுகுளத்தூரில் பள்ளமான பகுதிகளான அரசு மருத்துவ மனை முதல் தெரு, நாடார் தெரு, முளைக்கொட்டு தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, கிழக்குத் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  மேலும் வாருகால் களில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Related Tags :
Next Story