இடைக்காட்டூரில் தயாராகும் தீப விளக்குகள்
கார்த்திகை தீப திருநாளையொட்டி மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் மெழுகு பொருட்களால் ரெடிமேட் தீப விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மானாமதுரை,
கார்த்திகை தீப திருநாளையொட்டி மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் மெழுகு பொருட்களால் ரெடிமேட் தீப விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீப விளக்குகள்
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பிறந்தாலே அனைத்து வீடுகளிலும் கார்த்திகை தீப திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு இரவு நேரத்தில் வீடுகள் முழுவதும் மண் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தியால் செய்யப் பட்ட விளக்குகளை கொண்டு தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதையொட்டி இந்த ஆண்டு கார்த்திகை தீப திருநாள் நாளை மறுநாள் (19-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் மெழுகு கொண்டு தயாரிக்கப்படும் ரெடிமேட் விளக்கான கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் இங்கு மெழுகு மூலம் குபேரவிளக்கு, பிள்ளை யார் விளக்கு, சிரிக்கும் புத்தர் விளக்கு, மயில் விளக்கு உள்ளிட்ட பல்வேறு விதமான விளக்குககள் தயாரிக் கப்படும். ஆனால் இந்த ஆண்டு மூலப்பொருளாக உள்ள மெழுகு விலை உயர்வு மற்றும் போதி அளவு மூலப்பொருள் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் குறைந்தளவே விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து இந்த விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ள இடைக்காட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறியதாவது:- இடைக்காட்டூர் பகுதியில் இந்த மெழுகுவால் ஆன தீப விளக்கு தயாரிக்கும் பணி குடிசை தொழில் போன்று செய்து வருகிறோம்.
ஆண்டு முழுவதும் நாங்கள் பணியில் ஈடுபட்டால் கூட கார்த்திகை தீப திருநாள் தினத்தன்று மட்டும் தான் எங்களது இந்த விளக்குகள் பயன்பாடு அதிகளவில் இருக்கும்.
மூலப்பொருள் விலை உயர்வு
ஏனெனில் இந்த விளக்குகளுக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய காலக்கட்டத்தில் வீடுகள் தோறும் கார்த்திகை தினத்தன்று வீட்டு வாசல் பகுதியில் மட்டும் எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு மற்ற இடங்கள் முழுவதும் நாங்கள் தயாரிக்கும்ரெடிமேட் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் தான் இந்த ரெடிமேட் விளக்குகளுக்கு மக்களிடம் அதிகளவில் மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மூலப்பொருளாக உள்ள மெழுகு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்ததால் தற்போது விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இந்த ஆண்டு குபேர தீபம், அண்ணாமலையார் தீபம், லெட்சுமி மங்கல தீபம், பச்சை மற்றும் சிவப்பு நிறத்திலான பேன்சி கப் தீபம் ஆகியவை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.15முதல் ரூ.80வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story