வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு


வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 16 Nov 2021 11:37 PM IST (Updated: 16 Nov 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே உள்ள மாமண்டூர் ஏரி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டாார்.

தூசி

தூசி அருகே உள்ள மாமண்டூர் ஏரி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டாார்.

 நண்பர்கள்

காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் (வயது 27), சோழராஜன் (27), ஜெகன், தட்சணாமூர்த்தி. இவர்கள் 4 பேரும் நண்பர்கள். 

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அவர்கள் 4 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள மாமண்டூர் ஏரியில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர். 

பின்னா் அவர்கள் ஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென சதீஷ்குமார், சோழராஜன் ஆகியோர் வெள்ள நீரில் அடித்துச் சென்றனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு

இதற்கிடையில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட சோழராஜனை செய்யாறு தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். 

இ்ந்த நிலையில் 3 நாட்களாக தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் தூசி நத்த கொள்ளை மாந்தோப்பு அருகில் நீரோடையில் ேசாழராஜன் பிணமாக மீட்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து உடலை தூசி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story