குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் நடிகர் சூர்யா, டைரக்டர் ஞானவேல் மீது பா.ம.க.வினர் புகார் மனு
நடிகர் சூர்யா டைரக்டர் ஞானளவேல் ஆகியோர் மீது குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் பாமகவினர் புகார் அளித்தனர்.
குடியாத்தம்
நடிகர் சூர்யா, டைரக்டர் ஞானளவேல் ஆகியோர் மீது குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் பா.ம.க.வினர் புகார் அளித்தனர்.
குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்துக்கு நேற்று பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி தலைமையில் பா.ம.க.மற்றும் வன்னியர் சங்கத்தினர் வந்தனர்.
அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் ‘ஜெய் பீம்’ படம் குறித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது ஜாதிப் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அப்போது பா.ம.க. மாவட்ட மாநில இளைஞரணி துணை செயலாளர் என். குமார், ஒன்றிய செயலாளர்கள் சாம்ராஜ், கோபி, ராமன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story