வருவாய்த் துறையின் நிலுவை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையின் நிலுவை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையின் நிலுவை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பட்டாக்கள் நிலுவை குறித்தும், பல்வேறு துறைகளுக்கு புதிய அலுவலகம் அமைத்திட இடங்கள் தேர்வு செய்து வழங்குவது நிலுவையில் உள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
புதிய சமத்துவபுரம் அமைத்திட இடங்கள் தேர்வு செய்து வழங்குவது, தாலுகா வாரியாக சிறிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து வழங்குவது, வருவாய்த்துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் உதவித்தொகை வழங்குவது மற்றும் கணினி வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வருவாய்துறையின் சான்றிதழ்கள் நிலுவை உள்ளிட்ட வருவாய்த் துறை சம்பந்தமான அனைத்து பணிகள் நிலுவை மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து, நிலுவை பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் அனைத்து துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story