நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்


நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2021 12:27 AM IST (Updated: 17 Nov 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொழிலாளி கொலை 
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டின் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 29). கூலித்தொழிலாளியான இவரை நேற்று முன்தினம் மர்மநபர்கள் கொலை செய்தனர். 
இதை தொடர்ந்து அவரது உடல் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அவரது உடலை வாங்க மறுத்து சுபாசின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சாலை மறியல்
அப்போது அவர்கள் கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். 
இந்த போராட்டத்தினால் அந்த பகுதி வழியாக சென்ற பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதை தொடர்்ந்து அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story