சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு
சதுரகிரி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக பிரதோஷ வழிபாட்டில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story