பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோவில் கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 1:53 AM IST (Updated: 17 Nov 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் மறவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ்(வயது 25). இவர், பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியின் தந்தையிடம், மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் தந்தை அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசை கைது செய்தனர். ஹரிஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது‌.

Next Story