சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 1:57 AM IST (Updated: 17 Nov 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் காரியானூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரியானூர் சிவன் கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த நடராஜன்(வயது 35), சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து நடராஜனை கைது செய்த போலீசார், அவர் விற்பதற்காக வைத்திருந்த 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story