கடந்த 10 மாதங்களில் கர்நாடகத்தில் சாலை விபத்துகளில் 7,523 பேர் சாவு
கர்நாடகத்தில் கடந்த 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 7,523 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 7,523 பேர் உயிரிழந்து உள்ளனர்.
7,523 பேர் சாவு
கர்நாடக மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கழகம் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் நடக்கும் விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயம் அடைந்தோர் குறித்து தகவல்களை தெரிவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வரை கர்நாடகத்தில் நடந்த விபத்துகள் அதில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து தகவல்கள் கூறப்பட்டு உள்ளது.
அதன்படி கர்நாடகத்தில் கடந்த 10 மாதங்களில் 28 ஆயிரத்து 36 சாலை விபத்துகள் நடந்து உள்ளது. அதில் 7,523 பேர் தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளனர். 33 ஆயிரத்து 864 பேர் காயம் அடைந்து உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 178 விபத்துகளில் நடந்து இருந்தது. அதில் 9 ஆயிரத்து 760 பேர் இறந்தனர். 39 ஆயிரத்து 492 பேர் காயம் அடைந்து இருந்தனர்.
விபத்துகளை தடுக்க நடவடிக்கை
ஆனால் கடந்த 2016 முதல் 2019 வரை கர்நாடகத்தில் 40 ஆயிரத்திற்கு அதிகமான விபத்துகள் நடந்து உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருந்தனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தான் உயிரிழப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் வாகன ஓட்டிகள் குடித்துவிட்டும், கவனக்குறைவாக வாகனங்கள் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் விபத்துகளை தடுக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தரமான முறையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story