போக்குவரத்து பாதுகாவலர் தன்னார்வ பணிக்கு விண்ணப்பிக்கலாம்
நெல்லையில் போக்குவரத்து பாதுகாவலர் பணிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாநகர போலீஸ் துறையில் போக்குவரத்து பாதுகாவலர் தன்னார்வ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருக்கலாம். அரசியல் சார்பற்றவராகவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்படாதவராகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவோர் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு நெல்லை மாநகர போலீஸ் ஆயுதப்படை உதவி கமிஷனர் முத்தரசு, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோரது அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 30-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story