தர்மபுரி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி


தர்மபுரி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
x
தினத்தந்தி 17 Nov 2021 10:31 AM IST (Updated: 17 Nov 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான்.

தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள நூலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மகன் கவியரசு (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கவியரசு பரிதாபமாக உயிரிழந்தான். மர்ம காய்ச்சலால் இறந்த சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story