காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை ஒகேனக்கல்லில் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை ஒகேனக்கல்லில் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 17 Nov 2021 10:31 AM IST (Updated: 17 Nov 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனிடையே நேற்று 2-வது நாளாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.
தீவிர கண்காணிப்பு
மேலும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வர தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மடம் சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முதலைப்பண்ணை, மணல்திட்டு, ஆலம்பாடி, நாடார் கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
அப்போது பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story