தேனாம்பேட்டையில் பணி நிரந்தரம் கோரி இலவச அமரர் ஊர்தி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
தேனாம்பேட்டையில் பணி நிரந்தரம் கோரி இலவச அமரர் ஊர்தி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை,
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் நல ஊர்தி சேவை டிரைவர்கள் நேற்று பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் நல ஊர்தி சேவை திட்டங்களில் செயல்படும் 400 ஆம்புலன்சுகளில் 650 ஊழியர்கள் பணியாற்றி வருகிறோம். மனிதநேயத்துடன் அர்ப்பணிப்புடனும் பணிப்புரியும் எங்களின் ஊதியம் மிகவும் குறைவாகவே உள்ளது.
குறைந்த ஊதியத்துடன் கொரோனா போன்ற கொடுந்தொற்று காலத்திலும் உயிருக்கு பயப்படாமல் சுகாதாரத்துறையுடன் இணைந்து முழுமையாக சேவைகள் செய்து வந்த எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, கொரோனா பேரிடர் காலங்களில் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட டிரைவர்கள் அனைவரையும் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு மீண்டும் பணிமாற்றம் செய்யவேண்டும்.
2018-ம் ஆண்டுக்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. எனவே 7 சதவீத ஊதிய உயர்வினை வழங்க வேண்டும்.மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த டிரைவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்களுக்கு வரவேண்டிய பணப் பலன்களை அரசு ஏற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story