செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 63 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 63 பேர் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 645 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,522 ஆக உயர்ந்துள்ளது. 787 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 800 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,262 ஆக உயர்ந்துள்ளது. 275 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story