தொழிலாளி மின்சாரம் தாக்கி காயம்


தொழிலாளி மின்சாரம் தாக்கி காயம்
x
தினத்தந்தி 17 Nov 2021 6:42 PM IST (Updated: 17 Nov 2021 6:42 PM IST)
t-max-icont-min-icon

தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி காயம்

குண்டடம்
குண்டடத்தை அடுத்துள்ள அய்யப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஆயிமுத்து (வயது 70). இவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை ஆயிமுத்து மற்றும் சிலர் நாவிதன்புதூரில் சிதம்பரம் என்பவரது தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆயிமுத்து ஒரு மரத்தில் ஏறி தேங்காய் குழையை வெட்டும்போது எதிர்பாராதவிதமாக அரிவாள் தென்னை மரத்தை உரசியபடி சென்ற உயரழுத்த மின்கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கியதில் அலறியபடி இடுப்புக்கு பயன்படுத்தும் இடைக்கயிற்றில் தொங்கினார்.
உடனே அருகில் மற்ற மரங்களில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து சென்று ஏணியை பயன்படுத்தி ஆயிமுத்து கீழே விழாமல் பிடித்துக் கொண்டனர். இதுபற்றி பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி இடைக்கயிற்றில் தொங்கியபடி இருந்த ஆயிமுத்துவை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story