டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
ஊத்துக்குளி
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரியில் டீசல் நிரப்பிக்கொண்டு டேங்கர் லாரி கரூர் ஒன்று கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த. இந் லாரி ஊத்துக்குளி அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள தாளப்பதி பகுதியை கடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோர குழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்து டீசல் கசிந்ததது.உடனே அப்பகுதி மக்கள் உடனடியாக அவினாசி தீயணைப்பு துறையினருக்கும், ஊத்துக்குளி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.அவினாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரைன் உதவியுடன் லாரியை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story