சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 17 Nov 2021 7:10 PM IST (Updated: 17 Nov 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கோத்தகிரி

கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஐப்பசி மாத இறுதி நாள் சுக்ல பட்ச பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.  ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப்பின், பவுர்ணமிக்குப்பின் என்று 2 பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சுக்ல பட்ச பிரதோஷ நாளான நேற்று முன்தினம் மாலை கோத்தகிரி சக்தி மலையில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்தபின் தீபாராதனை நடைபெற்றது. 

மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, அருகம்புல் சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story