அரவேனு பஜாரில் கரடி நடமாட்டம்


அரவேனு பஜாரில் கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2021 7:10 PM IST (Updated: 17 Nov 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

அரவேனு பஜாரில் கரடி நடமாட்டம்

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் அரவேனு பஜார் அமைந்து உள்ளது. இங்கு தினமும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்தநிலையில் அரவேனு பஜாரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கரடி உலா வருகிறது.

அந்த கரடி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் அருகே அப்புறப்படுத்த குவித்து வைத்திருந்த குப்பைகளில் உள்ள உணவு பொருட்களை தின்றது. மேலும் குப்பைகளை சிதறடித்துவிட்டு அங்குள்ள கடைகளின் முன்பு ஓய்வெடுத்தது. கரடியை கண்ட அக்கம்பக்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி விரட்டியடித்தனர். 

எனினும் அந்த கரடி தொடர்ந்து அதே பகுதியில் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே அந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story