கனகராஜின் உறவினர் சிகிச்சை முடிந்து மீண்டும் கூடலூர் சிறையில் அடைப்பு
கனகராஜின் உறவினர் சிகிச்சை முடிந்து மீண்டும் கூடலூர் சிறையில் அடைப்பு
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர் விசாரணையில் வழக்கில் தடயங்களை அழித்ததாக ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்கள் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்னர்.
இதற்கிடையே 15-ந் தேதி ரமேசுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது சிறுநீரக பாதிப்புக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிகிச்சை முடிந்ததும் போலீசார் பாதுகாப்பாக ரமேசை அழைத்து வந்து மீண்டும் கூடலூர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story