அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு முன்ஜாமீன்


அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு முன்ஜாமீன்
x
தினத்தந்தி 17 Nov 2021 7:13 PM IST (Updated: 17 Nov 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு முன்ஜாமீன்

ஊட்டி

நீலகிரி மாவட்டம் குன்னுரை சேர்ந்த அதி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன்(வயது 55), கடந்த 4-ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று இரவில் குடிபோதையில் ஆடையின்றி முத்தாளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள உறவினரான கோபி(47) என்பவரது வீட்டுக்குள் புகுந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது மகன் கிஷோருடன் சேர்ந்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக குன்னூர் போலீசார் கோபாலகிருஷ்ணன், கோபி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு ஊட்டி கோர்ட்டில் கோபாலகிருஷ்ணன், கிஷோர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 15-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், கிஷோர் ஆகிய 2 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story