மாணவி தற்கொலை குறித்து மேலும் 2 பேரிடம் விசாரணை


மாணவி தற்கொலை குறித்து மேலும் 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 17 Nov 2021 7:53 PM IST (Updated: 17 Nov 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மாணவி தற்கொலை தொடர்பாக மேலும் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை

கோவையில் மாணவி தற்கொலை தொடர்பாக மேலும் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி, தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்தனர்.

தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் 3 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் ஆசிரியர் தவிர்த்து மற்ற 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர். அந்த 2 பேரிடமும் போலீசார் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

செல்போன், மடிக்கணினி ஆய்வு

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட 4 தனிப்படை யினர் நேற்று முன்தினம் மாணவியின் வீடு, ஆசிரியர் வீடு, பள்ளியில் முதல்வர் அறை, மாணவியின் நண்பர் வீடு என 4 இடங்களில் சோதனை நடத்தி 2 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, மாணவி பயன்படுத்திய நோட்டு, புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

செல்போன்கள் மற்றும் மடிக்கணினியில் உள்ள தகவல்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கடைசியாக எப்போது மாணவியை தொடர்பு கொண்டார்?, மாணவியின் செல்போன் எண்ணிற்கு பேசியவர்கள் குறித்த விவரங்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
மேலும் அந்த மாணவியின் தோழிகளிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story