தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் பதுக்கிய 9 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் பதுக்கிய 9 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
x
தினத்தந்தி 17 Nov 2021 8:07 PM IST (Updated: 17 Nov 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் பதுக்கிய 9 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பொன்னங்குறிச்சி-பேய்குளம் சாலையில் அரியநாயகிபுரம் அருகே உள்ள தனியார் நிறுவன குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தலா 40 கிலோ எடை கொண்ட 225 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு இருந்த குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story