உயர் பதவிக்கு சென்றாலும் ஆசிரியர்களை மாணவர்கள் மறக்க கூடாது
உயர் பதவிக்கு சென்றாலும் ஆசிரியர்களை மாணவர்கள் மறக்க கூடாது என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
நாகப்பட்டினம்;
உயர் பதவிக்கு சென்றாலும் ஆசிரியர்களை மாணவர்கள் மறக்க கூடாது என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
5-வது பட்டமளிப்பு விழா
நாகை பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயராஜ் வரவேற்று பேசினார்.
இளங்கலை மற்றும் முதுகலையைச் சேர்ந்த 275 மாணவ- மாணவிகளுக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது படித்து பட்டம் பெறும் மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படும் வகையில் கொண்டு செல்ல வேண்டும்.
நேர்மையான குடிமகன்
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை இருக்கும். அந்த திறமையை வளர்த்துக்கொண்டு எதிர்கால சமுதாய பயன்பாட்டு்க்கு பயன்படுத்த வேண்டும். எந்த உயர் பதவிக்கு சென்றாலும் கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களை மாணவர்கள் மறக்க கூடாது. உங்களை பட்டம் பெற வைத்த பெற்றோரையும் மறக்க கூடாது. உங்களது பெற்றோர் நினைப்பது போல் சமுதாயத்தில் நேர்மையான குடிமகனாக வாழ வேண்டும்.
மனிதனை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என நினைத்து கொண்டு இருந்தோம். ஆனால் மிக சிறிய நுண்கிருமியான கொரோனா வைரஸ், நோயை பரப்பி மனிதர்கள் இப்படி தான் வாழ வேண்டும் என கற்றுக்கொடுத்தது. எனவே இனிவரும் காலங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story