பொள்ளாச்சி குமரன் நகரில் பழுதுபார்க்கும் பணிக்காக ரெயில்வே கேட் மூடல்


பொள்ளாச்சி குமரன் நகரில் பழுதுபார்க்கும் பணிக்காக ரெயில்வே கேட் மூடல்
x
தினத்தந்தி 17 Nov 2021 10:24 PM IST (Updated: 17 Nov 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி குமரன் நகரில் பழுதுபார்க்கும் பணிக்காக ரெயில்வே கேட் மூடல்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி குமரன் நகர் ரெயில்வே கேட் பழுதுபார்க்கும் பணிக்காக மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

பராமரிப்பு பணிகள்

பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதையில் உள்ள குமரன் நகர் ரெயில்வே கேட்டில்  பழுதுபார்க்கும் பணி நடந்தது. இதற்காக அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த மணலை அப்புறப்படுத்தி னார்கள். மேலும் ஜல்லி கற்களை கொட்டி தண்டவாளத்தில் உறுதி தன்மை பலப்படுத்தப்பட்டது. 

மேலும் தண்டவாளத்தில் கிரீஸ், ரெயில்வே கேட் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன. இந்த பணிகள் காரணமாக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங் கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. 

வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் பெரும்பாலான வாகனங்கள் குமரன் நகர் ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் குமரன் நகரில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 

மேலும் அவர்கள் 3 கி.மீ. தூரம் சுற்றி சென்றனர். மேலும் மார்க் கெட் ரோடு, ராஜாமில் ரோடு பகுதிகளிலும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 


Next Story