பிடிவாரண்டு குற்றவாளி கைது


பிடிவாரண்டு குற்றவாளி கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 10:35 PM IST (Updated: 17 Nov 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

பிடிவாரண்டு குற்றவாளி கைது


விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் பிரகாஷ் என்கிற குண்டுபிரகாஷ் (வயது 26). கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக பிரகாசை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிரகாஷ், மீண்டும் விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதோடு அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் மறைந்திருந்த பிரகாசை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story