2 பெண்களிடம் 12 பவுன் தங்க நகை திருட்டு
2 பெண்களிடம் 12 பவுன் தங்க நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தை சேர்ந்த கிட்டு என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 62).இவர் நேற்று ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஓடும் பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 ¾ பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடி விட்டனர்.இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தலைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மருங்கநாதன் என்பவரின் மனைவி பானுமதி (55). இவர் நேற்று ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். டி-பிளாக் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story