வெள்ளியணையில் தமிழக கபடி அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி
வெள்ளியணையில் தமிழக கபடி அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடந்தது.
வெள்ளியணை
தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா 2021 கபடி போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்ய வரும் 24 ஆம் தேதி சென்னையில் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்டத்திலிருந்து 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 4 பேரை தேர்ந்தெடுத்து சென்னையில் நடைபெறும் தேர்வு போட்டியில் கலந்துகொள்ள செய்ய வீரர்களை தேர்வு செய்யும் போட்டியை கரூர் மாவட்ட கபடி கழகம் வெள்ளியணையில் உள்ள அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு திடலில் நடத்தியது. மாவட்ட கபடி கழக தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியை கல்லூரியின் செயலாளர் நாராயணசாமி, முதல்வர் ரமேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறந்த வீரர்களை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 4 பேரை தேர்வு செய்தனர்.
Related Tags :
Next Story