அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 17 Nov 2021 11:03 PM IST (Updated: 17 Nov 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதம் 1-ந் தேதி பிறந்ததால் கோவையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கோவை

கார்த்திகை மாதம் 1-ந் தேதி பிறந்ததால் கோவையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

அய்யப்ப பக்தர்கள்

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து 40 நாட்கள் விரதம் இருந்து  கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று கோவையில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.  

கார்த்திகை 1-ந் தேதியையொட்டி சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் நேற்று 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார். அய்யப்ப சுவாமி கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மாலை அணிந்தனர்

அவர்கள், வீடுகளில் நீராடிவிட்டு கருப்பு மற்றும் காவி நிற ஆடை களை அணிந்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தபடி வந்தனர். அவர்களுக்கு கோவிலில் உள்ள குருசாமிகள் துளசி மாலை அணிவித்த னர். அதன்பிறகு பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு வந்து இருந்த பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இருந்தனர்.

கடந்த ஆண்டு கொரோனா அதிகமாக இருந்ததால் சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதால் அதிக எண்ணிக்கை யிலான பக்தர்கள் நேற்று மாலை அணிந்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் அய்யப்பனின் துதி பாடி சரண கோஷமிட்டனர்.


Next Story