கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்


கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 Nov 2021 11:17 PM IST (Updated: 17 Nov 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தேவகோட்டை, 
தேவகோட்டை தாலுகா மினிட்டாங்குடி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் சந்திரசேகர். இவர் அந்த கிராமத்தில் நிலப் பிரச்சினை  தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாக  செயல்பட்டு பட்டா மாறுதல் செய்ததாகவும், எதிர்தரப்பினர் புகார் செய்த பின்பு மீண்டும் அந்த பட்டாவை ரத்து செய்து பழைய நிலையிலேயே வைத்ததாகவும், தேவகோட்டை ஆர்.டி.ஓ.வுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.டி.ஓ. பிரபாகரன் விசாரணை நடத்தி கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story