இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மெட்டாலா, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளபட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட இளநகர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிபட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை, மாணிக்கம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் பானுமதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story