நாமக்கல்லில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி
நாமக்கல்லில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி
நாமக்கல்:
நாமக்கல்லில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.
தினமும் 50 ஆயிரம் பேர்
கேரள மாநிலம் சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலைக்கு யாத்திரை சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. தினசரி 50 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து சபரிமலைக்கு சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துளசி மணிமாலை
அந்த வகையில் கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு பக்தர்களுக்கும் குருசாமிகள் மாலையை அணிவித்தனர்.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து துளசி மணிமாலை அணிந்து கொண்டு தங்களின் விரதத்தை தொடங்கினர். மேலும் அவர்கள் கருப்பு, நீலம், காவி உள்ளிட்ட நிறங்களில் வேட்டி அணிந்திருந்தனர். இதன் காரணமாக நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.
Related Tags :
Next Story