அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாதத்தையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
அரியலூர்,
அய்யப்பன் கோவில்
பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்குகரையில் உள்ள அய்யப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜையைெயாட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
முதன் முதலில் கார்த்திகை மாலை அணிந்து ஒருமண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் கன்னிசாமிகளுக்கும், ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்வோரும் சந்தனமாலை மற்றும் துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
தெப்பத்திருவிழா
கார்த்திகை மாதபிறப்பையொட்டி அய்யப்பன் கோவிலில் கோபூஜையும், கன்னிமூல கணபதி அய்யப்பசாமி, மஞ்சமாதாவுக்கு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதேபோல் தினமும் காலை சிறப்பு வழிபாடும், மாலையில் சரண கோஷம், படி பூஜையுடன் அன்னதானமும் தொடர்ந்து நடக்கிறது.
இந்த ஆண்டு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் தெப்பக்குளம் நிரம்பி உள்ளதால் தெப்பத்திருவிழா நடத்த வாய்ப்புள்ளதாகவும் 55-வது ஆண்டு மண்டலபூஜை மகாஉற்சவ விழா டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் (கார்த்திகை மாத இறுதியில்) நடைபெற திட்டமிடப்பட்டு வருவதாகவும், மண்டல பூஜை மகா உற்சவ நிகழ்ச்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விரதம் இருக்கும் பக்தர்கள்
இதேபோல் அரியலூரில் உள்ள பிள்ளையார் கோவில், அகோரவீரபத்திரர் கோவில் உள்பட நகரின் பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.
மேலும், அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Related Tags :
Next Story