அரியலூரில் ஒருவருக்கு கொரோனா
அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், நேற்று புதிதாக 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 19 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 34 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 289 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 607 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 6,121 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story