பெரம்பலூர் மாவட்டத்தில் 19 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
தொடர் மழையினால் பெரம்பலூர் மாவட்டத்தில் 19 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
பெரம்பலூர்,
தொடர் மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 15-ந்தேதி பெய்த பலத்த மழையினால் குன்னம் தாலுகா அசூரை சேர்ந்த வேலு என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும், வடக்கு கீழப்புலியூரை சேர்ந்த பச்சமுத்துவின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரும் இடிந்து விழுந்தது.
இதேபோல் பெரம்பலூர் தாலுகாவில் மேலப்புலியூரை சேர்ந்த நித்யாவின் ஆஸ்பெட்டாஸ் வீட்டின் ஒரு பக்க மண் சுவரும், அதே கிராமத்தை சேர்ந்த துரைசாமியின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும், வடக்கு குரும்பலூரை சேர்ந்த தங்கவேல், சின்னசாமி ஆகியோரின் கூரை வீடுகளின் ஒரு பக்க சுவர்களும், தெற்கு கல்பாடியை சேர்ந்த கோவிந்தசாமியின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும் இடிந்து விழுந்தன.
வீடுகள் சேதம்
வேப்பந்தட்டை தாலுகா சிறுநிலாவை சேர்ந்த கருப்பண்ணனின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும் இடிந்து விழுந்தது. ஆலத்தூர் தாலுகாவில் செட்டிகுளத்தை சேர்ந்த ஜோதி கமலகண்ணனின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரும், மேலமாத்தூரை சேர்ந்த வேல்முருகனின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும், சாத்தனூரை சேர்ந்த ருக்மணியின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும், கிழக்கு கொளத்தூரை சேர்ந்த வில்லாலனின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரும் இடிந்து விழுந்தன.
இதேபோல் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக குன்னம் தாலுகாவில் காடூர் பட்டு மேற்கு ஓலைப்பாடியை சேர்ந்த முத்துசாமி ஆகியோரின் வீடுகளின் ஒரு பக்க சுவர்கள் இடிந்து விழுந்தன.
நிவாரண தொகை வழங்க கோரிக்கை
பெரம்பலூர் தாலுகாவில் கிழக்கு லாடபுரத்தை சேர்ந்த செல்லம்மாள், நொச்சியத்தை சேர்ந்த அழகேசன் ஆகியோரின் வீடுகளின் ஒரு பக்க சுவர்கள் இடிந்து விழுந்தன. வேப்பந்தட்டை தாலுகாவில் கடம்பூரை சேர்ந்த விவேகானந்தன், மங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம், பாதாங்கியை சேர்ந்த அய்யம்மாள் ஆகியோரின் வீடுகளின் ஒரு பக்க சுவர்கள் இடிந்து விழுந்தன. மேற்கண்ட 19 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவங்களில் உயிரிழப்பும், யாருக்கும் காயங்களும் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மழையினால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்கள் அரசின் நிவாரண தொகை வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story