ஓய்வு பெற்ற தனியார் சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


ஓய்வு பெற்ற தனியார் சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 Nov 2021 12:34 AM IST (Updated: 18 Nov 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற தனியார் சர்க்கரை ஆலை அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர், 
சர்க்கரை ஆலை அதிகாரி
பெரம்பலூர் அருகே எளம்பலூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 64). இவர் தனியார் சர்க்கரை ஆலையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக நேற்று காலையில் தனது மனைவி அம்பிகாவுடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் மாலை காமராஜின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை அக்கம், பக்கத்தினர் கண்டனர். இதுகுறித்து அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
நகை, பணம் திருட்டு
இதையடுத்து திருச்சியில் இருந்து காமராஜ் தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story