வெளிமாநில தொழிலாளர்கள் உணவு, இருப்பிடமின்றி தவிப்பு


வெளிமாநில தொழிலாளர்கள் உணவு, இருப்பிடமின்றி தவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 12:53 AM IST (Updated: 18 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநில தொழிலாளர்கள் உணவு, இருப்பிடமின்றி தவிப்பு

நெமிலி

நெமிலியை அடுத்த அகவலம் கிராமத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 22 தொழிலாளர்கள் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காமலும், தங்குவதற்கான இடவசதியும் செய்து கொடுக்காமல் உள்ளதால் உணவின்றி அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். ஆனால் புகாரை போலீசார் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்த சமூக சேவை அமைப்பினர் அரக்கோணம் கோட்டாட்சியர் மூலமாக தொழிலாளர் நலத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை். 

எனவே கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் தாசில்தார் ரவி மற்றும் வருவாய் துறையினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இதில் கம்பெனியின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதாகவும் நாளை  வரவழைக்கப்பட்டு முழுமையான விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர். 

மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு உணவிற்கான ஏற்பாடுகள் வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.

Next Story